isro 
மாவட்ட செய்திகள்

"2027ல் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்"

"ககன்யான் விண்கலத்தை 2027இல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு"

Web Team

2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று, இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வருகை தந்த இஸ்ரோ தலைவர் நாராயணன், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ககன்யான் விண்கலத்தை 2027இல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சந்திரயான்-4 திட்டம் நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்குக் கொண்டுவரும் நோக்குடன் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.