26 
மாவட்ட செய்திகள்

சேலம் பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜெகநாதன் ஓய்வு.. துணைவேந்தர் பொறுப்பு தமிழ் துறை தலைவரிடம் ஒப்படைப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ஜெகநாதனின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் துணைவேந்தர் பொறுப்பை தமிழ் துறை தலைவர் பெரியசாமியிடம் ஒப்படைத்ததால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.

Srini Vasan

பெரியசாமி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆசிரியர் அமைப்பின் மாநில துணைத் தலைவராக பதவி வகிப்பதோடு, அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையும், உயர்நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது.

போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அசாதாரண சூழலோ, துணைவேந்தர் உடல்நிலை சரியில்லாமல் படுக்கையில் இருந்தால் மட்டுமே, வேறு ஒருவரை அப்பொறுப்புக்கு நியமிக்க முடியும்.

வ்வாறு எந்த தேவையும் இல்லாத சூழலில் பெரியசாமியை நியமித்தது பல்கலைக்கழக சாசன விதிகளை மீறிய செயல் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.