தீபாவளி போனஸ், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு தொகையான 15 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒருமாத ஊதியத்தை தீபாவளி போன்ஸாக வழங்கிட கோரி போராட்டம் நடைபெற்ற நிலை யில், மாநகராட்சி அலுவலக கதவை மூடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.