தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் திருவாதிரை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 6-ஆம் நாள் இரவு நடராஜர் படி இறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமி உள்பிரகாரத்தில் வலம் வந்து ஆனந்த தாண்டவம் ஆடினார்.