மீஞ்சூர், திருவள்ளூர் 
மாவட்ட செய்திகள்

பள்ளிச் சிறுவனை கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்.. நாய்கள் கடித்து குதறியதால் சிறுவனுக்கு தலையில் படுகாயம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 6 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் 6 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமாரெட்டிப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் கவுசிக், வீட்டில் இருந்து கடைக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் 2 நாய்கள் சுற்றி வளைத்து கடித்துள்ளன.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.