பேருந்து கவிழ்ந்து விபத்து 
மாவட்ட செய்திகள்

குமரியில் இருந்து தேனிக்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவர்கள்.. ஆண்டிப்பட்டி அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

குமரி மாவட்டத்தில் இருந்து தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Srini Vasan

குமரி மாவட்டத்தில் இருந்து தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்து தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காலாண்டு விடுமுறையை முன்னிட்டு குமரி மாவட்டம் காப்புக்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுடன் 2 பேருந்துகளில் தேனிக்கு சுற்றுலா வந்தனர்.

இந்நிலையில், அதிகாலை 5 மணியளவில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.