01 
மாவட்ட செய்திகள்

SDPI கட்சி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.. முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் பறிமுதல்

சென்னை மண்ணடியில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Srini Vasan

சென்னை மண்ணடியில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

SDPI கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.பைசி மீது பண மோசடி புகார் எழுந்ததை தொடர்ந்து,

கடந்த 28-ம் தேதி கேரளாவில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, மண்ணடியிலுள்ள SDPI அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டன.