ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மீனவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொண்டி, புதுக்குடி பகுதியில் மீனவ மக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில், வீடுகளும் கடற்கரைக்கு அருகிலேயே உள்ளன. இந்த நிலையில், முதல் முறையாக கடல் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் கடற்கரையில் இருந்த மீனவர்களின் உடமைகள் சேதமடைந்துள்ளன.