TVR Kanthoori 
மாவட்ட செய்திகள்

சேக்தாவூது ஆண்டவர் தர்கா கந்தூரி விழா கொடி இறக்கம்

புனித கொடி இறக்கம் நேற்று இரவு வாண வேடிக்கைகளுடன் விமரிசையாக நடைபெற்றது.

Web Team

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவின் கொடி இறக்க நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

ஜாம்புவானோடை சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 724-வது வருட பெரிய கந்தூரி விழா கடந்த மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 14 நாட்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா, கடந்த 1-ம் தேதி நள்ளிரவு கோலாகலமாக நடைபெற்ற நிலையில், புனித கொடி இறக்கம் நேற்று இரவு வாண வேடிக்கைகளுடன் விமரிசையாக நடைபெற்றது.