TVR Drainage water issue 
மாவட்ட செய்திகள்

மன்னார்குடி அருகே வடிகால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர்

கால்வாய்க்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.

Manigandan Raja

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பூந்தாழங்குடியில் வடிகால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட தொற்று பாதிப்புகள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்த வடிகால்வாயில் கழிவு நீர் வடியாத நிலையில், கால்வாய்க்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதாக ஊர்மக்கள் தெரிவித்தனர்.