RPT Road issue 
மாவட்ட செய்திகள்

"ஷாபித் அலிஷா" நகரில் அடிப்படை வசதிகள் இல்லை

1-வது வார்டு "ஷாபித் அலிஷா" பகுதியில் சாலை, குடிநீர், மின்விளக்கு, கால்வாய் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை

Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே 13 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் மக்கள் எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பியுள்ளனர். ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு "ஷாபித் அலிஷா" பகுதியில் சாலை, குடிநீர், மின்விளக்கு, கால்வாய் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது.