சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர். தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், திமுக மற்றும் அதிமுகவினர் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் , எஸ்.ஐ,ஆர். தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, தங்களது வாக்காளர்கள் பெயரை திமுக திட்டமிட்டு நீக்க முயற்சிப்பதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். அப்போது, தாங்கள் தான் அதனை செய்வதாக திமுகவினர் குரல் எழுப்பியதால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.