நாகை கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அருகே சிப்காட் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென்னடார் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை எதிர்த்து ராஜா என்பவர் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது,
சிப்காட் அமைந்தால் விளைநிலங்களுக்கும், பறவைகள் சரணாலயத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.