42 
மாவட்ட செய்திகள்

கடனுக்கு ஜாமீன் போடாதவரின் சிபில் ஸ்கோர் குறைந்த விவகாரம்... இந்தியன் வங்கிக்கு ரூ.3.10 லட்சம் அபராதம் விதிப்பு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் கடனுக்கான கையெழுத்தை போடாத போதும், போட்டதாக கூறி சிபில் ஸ்கோரை குறைத்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு, இந்தியன் வங்கி 3 லட்சத்து 10 ஆயிரம் வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

Srini Vasan

மன்னார்குடியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் நாராயணன்புதிய ஆட்டோ வாங்க 3 லட்சம் ரூபாய் கடன் கேட்டு இந்தியன் வங்கியை அணுகியபோது சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாக தெரியவந்தது.

இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது, போடாத ஜாமீனுக்கு கையெழுத்து போட்டதாக கூறி, சிபில் ஸ்கோர் குறைக்கப்பட்டது .

விசாரணையில் வேறொரு சீனிவாசனுக்கு பதில் சீனிவாசன் மகன் நாராயணனின் ஆவணங்களை வங்கி, சிவில் நிறுவனத்திற்கு பகிர்ந்த விபரம் தெரிந்தது.