பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தை
மாதத்தில் நடைபெறும் பூபதி திருநாள் எனப்படும்.
தேர் திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது, நம்பெருமாள் தினமும் யாளி வாகனம் கருட வாகனம் யானை வாகனம் தங்க குதிரை
உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வந்தார், தை தேர் உற்சவத்தின் 9ம் திருநாள் முக்கிய நிகழ்ச்சியான தை தேர் திருவிழா
இன்று நடைபெற்றது.
இதற்காக அதிகாலை நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தை தேர் மண்டபம் வந்தடைந்தார், பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா என பக்தி கோஷமிட்டவர் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.. முன்னதாக அதிகாலை 4 மணிக்கு நம் பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டை
அலங்காரத்தில் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்தத் தை தேரில் மட்டும்தான் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் எழுந்தருளுவார் என்பது குறிப்பிடத்தக்கது உத்திர வீதியில் உள்ள தை தேரில் எழுந்தருளிய நம்பெருமாளை பெரும் திரளான பக்தர்கள் ரங்கா ரங்கா கோவிந்தா கோஷமிட்டவாரு தேரை வடம் பிடித்து தொடர்ந்து இழுத்து வருகின்றனர்.