Pallikaranai road damaged 
மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமாக உள்ள சாலையில் தேங்கிய மழைநீர்

பணிக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய வேலைக்கு சென்றவர்கள் சிரமமடைந்தனர்.

Web Team

சென்னை பள்ளிக்கரணையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக வேளச்சேரி- பள்ளிக்கரணை சாலையில் தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் வெளியேற்றாமல் ஆட்களை வைத்து கையால் அகற்றினர்.

இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பணிக்கு செல்வோர் மற்றும் அத்தியாவசிய வேலைக்கு சென்றவர்கள் சிரமமடைந்தனர்.