23 
மாவட்ட செய்திகள்

சென்னையில் புறநகர் ரயில்கள் 2 நாட்கள் ரத்து.. பராமரிப்பு பணி காரணமாக ரத்து - தெற்கு ரயில்வே

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பல மணி நேரம் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Srini Vasan

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் பல மணி நேரம் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கவரப்பேட்டை மற்றும் பொன்னேரி இடையே சிக்னல் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் இன்றும் நாளையும் மதியம் 1 மணி 20 நிமிடம் முதல் மாலை 5 மணி 20 நிமிடம் வரை 19 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், 2 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.