சென்னை மாநகருக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் தலைமையில், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி துணை ஆணையர், மாநகராட்சி நல அலுவலர், சிஎம்டிஏ தலைமைச் செயல் அதிகாரி, நீர்வளத் துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் ஆகியோரை உள்ளடக்கி இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.