Spicejet 
மாவட்ட செய்திகள்

ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு மதுரையில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான விமானம்

மதுரையில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரன்- வேயில் இருந்து மீண்டும் விமானம் நிறுத்துமிடத்திற்கு கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Web Team

மதுரையில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ரன்- வேயில் இருந்து மீண்டும் விமானம் நிறுத்துமிடத்திற்கு கொண்டு வரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானம் 130 பயணிகளுடன் ஓடுதள பாதைக்கு சென்றது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், மீண்டும் நிறுத்துமிடத்திற்கு விமானம் திரும்பி வந்து பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னரே மீண்டும் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதாக பயணிகள் குற்றம் சாட்டினர்.