18 
மாவட்ட செய்திகள்

வைகை அணையில் சோதனை பணிகள் மும்முரம்.. மதகுகளை இயக்கி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தேனி மாவட்டம் வைகை அணையில் சோதனை பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Srini Vasan

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், தேனி மாவட்டம் வைகை அணையில் சோதனை பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்க வாய்ப்புள்ளதால் மதகுகளை பராமரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில் மதகுகளை இயக்கி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மதகுகளை இயக்க ஜென்ரேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை, நீர்வரத்து உள்ளிட்டவற்றை 24 மணிநேரமும் கண்காணிக்க பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.