Vadapakkam 
மாவட்ட செய்திகள்

வடபக்கம் கீழத்தெரு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு என வழக்கு... சாலை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த அதிகாரிகள் வர உள்ளதாக தகவல் பரவியதையடுத்து மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.

Web Team

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை ஆக்கிரமிப்பை அப்புறப்படுத்த அதிகாரிகள் வர உள்ளதாக தகவல் பரவியதையடுத்து மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து தடைபட்டது.

வடபக்கம் கீழத்தெருவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டது.

இதற்காக அதிகாரிகள் வர உள்ளதாக தகவல் பரவ அப்பகுதியினர் கும்பகோணம் திருவாரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.