NIL killer elephant caught 
மாவட்ட செய்திகள்

ஓவேலியில் பொதுமக்களை அச்சுறுத்திய யானைக்கு முதல் மயக்க ஊசியை செலுத்திய வனத்துறையினர்

இந்நிலையில், வனக் கால்நடை மருத்துவர்கள் ராஜேஷ், கலைவாணன் ஆகியோர் அதிகாலை 7 மணி முதல் பரண் மேல் அமர்ந்து காத்திருந்து, பகல் பனிரெண்டரை மணிக்கு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தியுள்ளனர். ராதாகிருஷ்ணன் யானையை முதுமலை வனப்பகுதிக்கு கொண்டு செல்ல க்ரால் லாரியும், 2 ஜேசிபிகளும் தயார் நிலையில் உள்ளன.

Web Team

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ராதாகிருஷ்ணன் யானைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். ஓவேலி பகுதியில் சுற்றித் திரிந்த யானை தாக்கியதில் இதுவரை 12 பேர் உயிரிழந்த நிலையில், அதனை பிடிக்க 4 கும்கி யானைகள் உதவியுடன் கடந்த 7 நாட்களாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.