புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு டிக்கெட் வழங்கிவிட்டு அனுமதி மறுத்ததாகக் கூறி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, தனியார் நிறுவனம் சார்பில் விஜிபியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிஜே பார்ட்டிக்கு, டிக்கெட் வாங்கிய 500-க்கும் மேற்பட்டோரை அனுமதிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.