தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகை பூ கிடுகிடுவென உயர்ந்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. சங்கரன்கோவில் மற்றும் அதனை சுற்று பகுதிகளில் அதிகளவில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு விற்பனைக்காக சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை, வரத்து குறைவு மற்றும் சுபமுகூர்த்ததையொட்டி விலை உயர்ந்து விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர்.