தி மைலாப்பூர் இந்து பெர்மனெண்ட் ஃபண்ட் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், தனது முழு சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் யாதவ், முதலீட்டாளர்களிடம் 680 கோடி ரூபாய்க்கு மோசடி செய்துள்ளதாகவும், அவருக்கு சென்னை அண்ணா சாலை, அண்ணாநகர், ஆஸ்திரேலியாவில் சொத்துக்கள் உள்ளதாக முதலீட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.