இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை மாவட்டம் உக்கடம் பேருந்து நிலையம் அருகே உள்ள தீவுத்திடலில் 16 அடி உயரத்தில் சுமார் ஒன்றரை டன் எடையில் அசோக சக்கரம் சிலை திறக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் பெருமையை பறைசாற்றும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.