tvm 
மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் கிடந்த மூதாட்டி உடல், மனிதாபிமானமற்ற மக்கள்

டீசல் பிடிப்பதில் பொதுமக்கள் மும்முரம்

Web Team

திருவண்ணாமலை மாவட்டம், அரசம்பட்டு பகுதியில் லாரி மோதி உயிரிழந்த மூதாட்டியின் உடல் நடுரோட்டில் கிடந்த நிலையில், லாரியிலிருந்து வெளியேறிய டீசலை பிடிக்க மக்கள் முண்டியடித்துக் கொண்டனர். சென்னையிலிருந்து கர்நாடக மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்த டீசல் லாரி, சாலையின் குறுக்கே வந்த மூதாட்டியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதில், நிகழ்விடத்திலேயே மூதாட்டி பலியான நிலையில், உயிரிழப்பை கூட கண்டு கொள்ளாமல் மக்கள் லாரியிலிருந்து வெளியேறிய டீசலை பிடிப்பதிலேயே ஆர்வமாக இருந்தது மனிதாபிமானம் என்ற ஒன்று மரித்துவிட்டதா? என்ற கேள்வியையே எழுப்பும் வகையில் இருந்தது.