திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில் மாடுகள் மற்றும் நாய்கள் தொல்லை காணப்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார தலமாக திகழ்ந்து வரும் நிலையில், கோவில் வளாகத்தில் ஏராளமான நாய்களும், மாடுகளும் சுற்றித் திரிகின்றன. பரிகாரம் செய்யும் பக்தர்கள் அளிக்கும் வாழைப்பழம் மற்றும் அகத்தி கீரைகளை சாப்பிட காத்திருக்கும் பசுக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்களையும் விரட்டும் நிலை காணப்படுகிறது. இதனால், கோவில் வளாகத்தை சுற்றும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.