17 
மாவட்ட செய்திகள்

சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புலி.. புலியின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமான 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். செலுக்காடி வனப்பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேரில் வந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்த நிலையில், அதற்கு காரணமான 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

செலுக்காடி வனப்பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் நேரில் வந்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட வனத்துறையினர், மணிகண்டன், மாரிமுத்து, விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழந்தது தெரியவந்தது.