CDL House damaged 
மாவட்ட செய்திகள்

கனமழையால் ஊறிப்போன ஓட்டு வீட்டின் சுவர் இடிந்தது

அன்னதானம்பேட்டை கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதியடைந்துள்ளனர்.

Web Team

கடலூர் மாவட்டம் வெங்கடாம்பேட்டை கிராமத்தில் கனமழையினால் ஊறிபோன ஓட்டு வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது. குறிஞ்சிப்பாடி, வடலூர் குள்ளஞ்சாவடி, நெய்வேலி இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெங்கடாம்பேட்டையிலுள்ள வீட்டின் சுவர் இடிந்த நிலையில் குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால் நல்வாய்ப்பாக தப்பினர். மேலும் அன்னதானம்பேட்டை கிராமத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதியடைந்துள்ளனர்.