kanji 
மாவட்ட செய்திகள்

5,000 பனை விதைகள் நடும் பணி, உற்சாகம்

5000 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

Web Team

உத்திரமேரூர் அருகே 5000 பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் உதவியுடன் பனை விதைகள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடங்களில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறை மற்றும் விதைகள் தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெற்ற பனை விதைகள் நடவு விழாவில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுடன் இணைந்து பனை விதைகளை நடவு செய்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 16க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சுமார் 5000 பனை விதைகளை பல்வேறு இடங்களில் நடவு செய்தனர்.