பிளாஸ்டிக் குப்பைகளால் உலகம் மூச்சுத்திணறுவதாக வேதனைப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பூமிப்பந்தின் நுரையீரல் பாதுகாக்கப்பட நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம் என மக்களை வலியுறுத்தினார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசிய அவர், துணிப்பை மற்றும் தண்ணீர் பாட்டில் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற மாட்டோம் என மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.