கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு பெண்ணின் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நந்திமங்கலம் பகுதியில் பாரதிதாசன், அசோக்குமார் என்பவர்களது வீடுகளின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த 2 மர்ம நபர்கள்,
அங்கு எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த சக்திவேல் என்பவரது வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் சக்திவேலின் மனைவியின் கழுத்தில் கிடந்த ஐந்து பவுன் தாலி செயினை இழுக்க முயன்றபோது, கையில் கிடைத்த மூன்று பவுன் தாலி செயினோடு தப்பி ஓடினர்.