இரவு 10 மணிக்கு மேல் பட்டாசுகளை வெடித்து அதனை செல்போனில் ரீல்ஸ் எடுத்து பொதுமக்களுக்கு இடையூறும் செய்த இளைஞர்களை கண்டித்த ஒரே காரணத்திற்காக தீபாவளி தினத்தில் எஸ்எஸ்ஐ அடித்துக் கொ*லப்பட்டிருக்கும் நிலையில் போதை இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காக்கிகளுக்கு பண்டிகைகள் ஏது? பட்டாசுகள் ஏது? எல்லாநாளும் ஒன்றுதானே? என நேரங்காலம் பார்க்காமல் தீபாவளியன்றும் பணியை முடித்துவிட்டு வந்த காவலர்,அராஜக இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தான் சோகமே.
தீபாவளி நாளன்று...
தேனி டிஎஸ்பி அலுவலகத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார் செந்தில்குமார். 55 வயதான இவர் தீபாவளியன்று பணி முடிந்து இரவு 10.30 மணிக்குமேல் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். சமதர்மபுரம் மெயின் பஜாரில் அவர் சென்று கொண்டிருந்தபோது சில இளைஞர்கள் அதிக சத்தத்துடன் சீறிப்பாயும் பட்டாசுகளை வெடித்தும், தங்களது செல்போனில் அதனை ரீல்ஸாக எடுத்தும் கத்திக்கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர்.
ண்டித்த காவலர்
அது, அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நிலையில், ‘பட்டாசுகள் வெடிப்பதற்கான நேரம் கடந்துவிட்டது, அதனால் கலைந்து செல்லுங்கள், நடுரோட்டில் நின்று கொண்டு பட்டாசு வெடித்தால் மக்கள் எப்படி வந்து செல்ல முடியும்?’ என செந்தில்குமார் கண்டித்தார். அந்த கண்டிப்புதான் அவருக்கு கடைசிநாளாகவே அமைந்தது.
செந்தில்குமார் கூறுவதையெல்லாம் காதில் வாங்காமல் இளைஞர்கள் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருக்க, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த எஸ்எஸ்ஐ தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் காவலர் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.
போதையில் கொடூர தாக்குதல்
தலைக்கேறிய போதையில் இருந்த அந்த இளைஞர்களை பொதுமக்கள் தடுக்க முயன்றும் அவர்கள் யார் பேச்சையும் கேட்பதுபோல் இல்லை. ஒருகட்டத்தில் கடுமையான தாக்குதலில் நிலைகுலைந்து கீழே விழுந்த எஸ்எஸ்ஐ செந்தில்குமாரை பொதுமக்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக தங்கள் கொண்டாட்டங்களை கூட குடும்பத்தினரோடு கொண்டாடாமல் காக்கி உடையில் சுற்றும் காவலர்களை பண்டிகை காலங்களில் கூடுதலாக கொண்டாடதான் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஆனால், கண்டித்த ஒரே காரணத்திற்காக காவலர் செந்தில்குமாரை கொ* செய்துள்ள இளைஞர்களை காலத்திற்கும் மன்னிக்க முடியாது என்பதே பலரது ஆத்திரமாக உள்ளது. அதேநேரம், காவலரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு யார் ஆறுதல் கூறினாலும் அவர் உயிரோடு இருப்பதற்கு சமமாகுமா? எனவும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோவில் காண...