வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் ஐயப்ப பக்தர்கள் திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வருகை தருவதால் மேலும் கூட்டம் அதிகரித்தது. காலை முதலே கோவிலில் குவிந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.