திருவண்ணாமலை

குழந்தைகளுடன் பெண்கள் சாலைமறியல் போராட்டம்

மழைக்காமழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதாக குற்றச்சாட்டுலங்களில் தண்ணீர் தேங்குவதாக குற்றச்சாட்டு

Manigandan Raja

ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சி பகுதியில் பெண்கள் குழந்தைகளுடன் சாலை மறியல் போராட்டம்.

1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சி 1வது வார்டு
பக்கிரித்தக்கா தோப்பு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய
சமுகத்தினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதி சாலையில் இருந்து தாழ்வான பகுதி என்பதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி வீடுகளை சுற்றி மழை நீர் தேங்குவதாகவும் கால்வாய் வசதியின்றி தண்ணீர் தேக்கம் ஏற்படுவதாகவும்.

உடல் நல பாதிப்புகள்

இதனால் குழந்தைகள் முதியவர்கள் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முறையிட்டு எந்தவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

நோய் தொற்று பரவும் அபாயம்

தற்போது ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனை தொடர்ந்து பக்கிரித்தக்கா தோப்பு பகுதியில் மழை நீர் தேங்கியதால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் ஆரணி -ஆற்காடு சாலையில் குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆரணி தாலுக்கா போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை
தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் சுமார் 1/2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.