நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் இலை அழுகல் நோய் ஏற்பட்டு ஆயிரக் கணக்கான வாழை மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில், போலி உரம் காரணமாக ஏற்பட்டதா என விவசாயிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் மறறும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் நடவு செய்யப்பட்டு நோய் தாக்கம் காரணமாக இலைகள் பழுத்து கருகியதாக விவசாயிகள் தெரிவித்தனர். நோய் பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து தீர்வு காணவும், சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.