திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரும் மனுவில் கையெழுத்திட்டதாக கூறி புதுவை காங்கிரஸ் எம்பி வைத்தியலிங்கத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்திலிங்கத்தின் முகமூடி அணிந்த உருவபொம்மையை பாடையில் வைத்து சித்தரித்த பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பாஜகவினரின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரசாரும் பதில் போராட்டம் நடத்தினர்.