திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழாவையொட்டி, கோயிலுக்கு செல்லும் படிகளுக்கு பெண்கள் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஒவ்வொரு ஆண்டின் நிறைவை குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று சரவண பொய்கை அருகில் உள்ள முதல் படிக்கட்டில் இருந்து 365வது படிக்கட்டு வரை மஞ்சள், குங்குமம் வைத்து திருப்படி விழா நடைபெறுகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்துவந்த பக்தர்கள் சிவ வாத்தியங்கள் முழங்கப் படி வழியாக சென்று முருகனை வழிபட்டனர்.