காரில் சென்ற பெண்ணையும், இளைஞரையும் பைக்கிலேயே பின்தொடர்ந்து சென்று வெறித்தனமாக கொ* நடந்துள்ள நிலையில் குற்றவாளி யார்? அவர் போலீசில் பிடிபட்டாரா? பின்னணி என்ன?
கள்ளக்காதலுக்குள் மற்றொரு கள்ளக்காதல் முளைக்க, அதனை தட்டிக்கேட்ட பள்ளிகால நண்பரை பட்டியலினம் என சமூகத்தை குறிவைத்து ஏளனமாக பேச, கடைசியில் அது இரட்டைக்கொ*யில் முடிந்துள்ளது.
அக்கா, தம்பி உறவுமுறை கொண்டவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அருகே உள்ள வெங்கடேஸ்வரா நகரில் காலி வீட்டு மனைகள் விற்பனைக்காக உள்ளன. அந்த இடத்தில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்ததை கண்ட ஆடு மேய்க்கும் மூதாட்டி ஒருவர் அருகே சென்று பார்த்தார். அப்போது, ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கொ* செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையில் இறங்கினர். அதில், உயிரிழந்த பெண்ணும், இளைஞரும் அக்கா, தம்பி உறவுமுறை கொண்டவர்கள் என்பது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், பாச்சல் பகுதியை சேர்ந்த 28 வயதான ரஞ்சித் மற்றும் திப்பசமத்திரம் பகுதியை சேர்ந்த சிரஞ்சீவியின் மனைவி 30 வயதான மாலினி ஆகிய இருவரும்தான் கத்தியால் குத்தி கொ* செய்யப்பட்டு கிடந்தனர். இருவரையும் கொ* செய்தது யார்? எதற்காக கொ* செய்தனர்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் இறங்கினர்.
பள்ளிப்பருவ நண்பருடன்...
மாலினியின் கணவர்தான் இந்த கொ*யை செய்திருப்பார் என்ற கோணத்தில் தான் முதலில் விசாரணை நடந்துள்ளது. ஆனால், முக்கோண கள்ளக்காதல் தான் கொ*யில் முடிந்துள்ளதாக பின்னர்தான் போலீசுக்கு தெரியவந்தது. திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ள நிலையில் மாலினி தான் படித்த பள்ளியில் நடந்த Alumni Meetல் கலந்து கொண்டார்.
அதில், பள்ளிப்பருவ நண்பரான சஞ்சீவி காந்தி என்பவருடன் பேச ஆரம்பித்த மாலினிக்கு அதுவே தகாத உறவிற்கும் வழிவகுத்துள்ளது. 10 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து தங்கள் உறவை வளர்த்த இருவரும் தனிமையிலும் இருந்ததாக கூறப்படுகிறது.
தம்பி உறவு முறை கொண்டவருடன்...
ஒருகட்டத்தில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் மாலினியின் கணவருக்கு தெரியவர, கடுமையாக கண்டித்துள்ளார். அதன்பிறகு சஞ்சீவி காந்தியுடன் பேசுவதையே மாலினி நிறுத்தியதாகவும், சகோதரன் உறவுமுறை கொண்ட ரஞ்சித்துடன் பழக ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதையறிந்த சஞ்சீவி காந்தி தன்னுடன் உறவில் இருந்தால் பிரச்சினை, தம்பி உறவுமுறை கொண்டவருடன் தகாத உறவில் இருக்கலாமா? அது என்ன மாதிரியான ஒழுக்கம்? என கேள்வி எழுப்பி கண்டபடி திட்டியதோடு கடந்த 2 வாரமாக விடாமல் சண்டை போட்டதாகவும் தெரிகிறது.
செல்போனிலேயே திட்டித்தீர்த்த சஞ்சீவி நேரில் வந்து சண்டை போட மாலினியை தேடி அவரது ஏரியாவிற்கே பைக்கில் வந்துள்ளார். ஏற்கெனவே கொ*வெறியில் இருந்த சஞ்சீவி காந்தியின் கண்ணில் ரஞ்சித்தும், மாலினியும் காரில் செல்வது தென்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் பயங்கரம்
இதனால், இன்னும் ஆத்திரத்தின் எல்லையை கடந்த சஞ்சீவி அந்த காரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். வெங்கடேஸ்வரா நகரில் உள்ள காலி வீட்டு மனையில் அவர்களின் கார் நின்றதும், தனது பைக்கையும் நிறுத்திய சஞ்சீவி, மாலினியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தம்பி என அழைத்து தகாத உறவில் ஈடுபட வெட்கமாக இல்லையா? என மாலினியை சீண்டிய சஞ்சீவி, ரஞ்சித்தையும் வம்புக்கு இழுத்துள்ளார்.
அப்போது, ஆத்திரமடைந்த ரஞ்சித், சஞ்சீவி காந்தியை பளார் என அறைந்ததாக தெரிகிறது. அப்போது, தான் மறைத்து வைத்திருந்த பட்டன் கத்தியால் கண்ணில் ஒரே இறுக்கு இறுக்க, அதில் நிலை குலைந்து கீழே விழுந்த ரஞ்சித்தை சரமாரியாக குத்தி கொ* செய்துள்ளார் சஞ்சீவி. அப்போது, நீ பட்டியலினம்தானே? உன் சமூக புத்தி இதுதானே? என மாலினி வார்த்தையைவிட அதே பட்டன் கத்தியால் கள்ளக்காதலியின் உடம்பின் பல்வேறு இடங்களில் குத்திக் கொ* செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார் சஞ்சீவி காந்தி.
இதனிடையே தகவலறிந்து காவல் நிலையத்திற்கு ஓடிவந்த மாலினி மற்றும் ரஞ்சித்தின் உறவினர்கள், அக்கா-தம்பி உறவில் உள்ளவர்களை கொச்சைப்படுத்துவதா? வேண்டாத பட்டம் கட்டுவதா? என கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுஒருபுறமிருக்க, கொ* நடந்த சிலமணிநேரத்திலேயே செல்போன் லொகேஷனை வைத்து சஞ்சீவி காந்தியையும் போலீசார் கைது செய்தனர்.
வீடியோவைக் காணலாம்