RMD Boat issue 
மாவட்ட செய்திகள்

டிட்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று

மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து, சேரன்கோட்டை பகுதிகளில் கரை ஒதுங்கியது.

Web Team

டிட்வா புயல் காரணமாக, இராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசுவதால், பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் செல்ல முடியாத சூழலில், ராமேஸ்வரம் நோக்கி வந்த ரயில்கள் மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரி, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. ராமேஸ்வரத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகின் நங்கூரம் அறுந்து, சேரன்கோட்டை பகுதிகளில் கரை ஒதுங்கியது.