TUT SCHOOL BUS 
மாவட்ட செய்திகள்

டூரிஸ்ட் வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ராசா பட்டி விலக்கு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

Web Team

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே டூரிஸ்ட் வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்தனர். திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு டூரிஸ்ட் வேனில் 22 பேர் சென்று கொண்டிருந்த போது, ராசா பட்டி விலக்கு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து இடது பக்கமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.