KLK Husbend and wife death 
மாவட்ட செய்திகள்

கணவரை தொடர்ந்து மனைவியும் உயிரிழந்ததால் சோகம்

சமையல் எரிவாயு சிலிண்டரை சரியாக அடைக்காததால், அதிலிருந்து எரிவாயு கசிந்திருந்ததால் திடீரென தீப்பிடித்தது.

Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே எரிவாயு கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் காயமடைந்த கணவர் உயிரிழந்த நிலையில், மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரியூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்னுசாமி - அனுசுயா தம்பதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு மின்தடை காரணமாக வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்ற தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்துள்ளனர்.

ஆனால், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை சரியாக அடைக்காததால், அதிலிருந்து எரிவாயு கசிந்திருந்ததால் திடீரென தீப்பிடித்தது.