New Project - 2025-05-14T181443 
மாவட்ட செய்திகள்

கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி துறக்கும் நிகழ்வு... நெற்றியில் உள்ள பொட்டை அழித்து ஒப்பாரி வைத்த திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி துறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி துறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கூத்தாண்டவர் கோயிலில் கடந்த 29 ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அரவாணை கணவராக ஏற்றுக்கொண்டு தாலிக்கட்டிக்கொண்ட திருநங்கைகள், இன்று தாலியை துறந்து, நெற்றியில் உள்ள பொட்டை அழித்து,

வளையல்களை உடைத்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

தொடர்ந்து குளித்து முடித்த பின் வெள்ளை புடவை அணிந்த திருநங்கைகள் சாமிதரிசனம் மேற்கொண்டனர்.