DGL SIR Issue 
மாவட்ட செய்திகள்

வாக்காளர் சீர்திருத்த பணிகளில் குளறுபடி?

படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்குள் நிரந்தரமாக குடி பெயர்ந்து விட்டதாக தேர்தல் ஆணையம் நீக்கி விட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

Web Team

திண்டுக்கல் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் சீர்திருத்த பணிகளில் குளறுபடிகள் உள்ளதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். 20 ஆண்டுகளாக ஒரே பகுதியில் குடியிருக்கும் தன்னை, வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்து ஒப்படைப்பதற்குள் நிரந்தரமாக குடி பெயர்ந்து விட்டதாக தேர்தல் ஆணையம் நீக்கி விட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.