தூத்துக்குடியில் நியூஸ்தமிழ்24x7
தூத்துக்குடி

தரையில் அமர வைத்து விசாரணை, மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர்

தூத்துக்குடி மாவட்டம் மந்தித்தோப்பு கிராமத்தில் நரிக்குறவர் இன மக்களை தரையில் அமர வைத்து, கம்பை காட்டி மிரட்டிய கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானுமாமலையின் சர்ச்சைக்குள்ளான வீடியோ வெளியாகியுள்ளது.

Azhagiri Arumugam

வழக்கிற்கு சம்பந்தமே இல்லாத பெண்கள் உட்பட பலரையும் இரவென்றும் பாராமல் இருட்டில் வைத்து ஆய்வாளர் விசாரித்தது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

மது போதையில் தகராறு, கைது

மது அருந்தும் போது தகராறு, அடிதடி

தூத்துக்குடி மாவட்டம் மந்தித்தோப்பு கிராமத்தில் ராஜகோபால் நகர் உள்ளது. இங்கு நரிக்குறவர் இன மக்கள் வசித்து வரும் நிலையில், தீபாவளி தினத்தன்று அக்குடியிருப்பை சேர்ந்தவர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது அக்கும்பலுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி தகராறில் முடிந்தது.

இதில், அப்பகுதியைச் சேர்ந்த மூக்கையா, கணேசன், சரவணன், மாரி ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து காவல்துறைக்கும் தகவல் பறக்கவே, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், சம்பவம் தொடர்பாக மாவீரன், ரவி, குமார் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

விசாரணையில் விபரீதம்

சம்பவத்தன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானுமாமலை நிகழ்விடத்துக்கு சென்று விசாரணை நடத்திய விதம் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள மக்களை அடிமைகள் போலத் தரையில் அமர வைத்தும், கையில் கம்பை வைத்துக் கொண்டும் விசாரணை நடத்தியதுடன், அவர்களை தாக்க முயன்ற வீடியோவும் வெளியாகியுள்ளது.

கையில் லத்தி உடன்

இருட்டில் பெண்களிடம்...

அதோடு, இனியொரு முறை இங்கு தகராறில் ஈடுபட்டால் வேலைக்கு போக விடமாட்டோம், வாகனங்களை உடைத்தெறிந்து விடுவோம் என ஆய்வாளர் வானுமாமலை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த அடிதடி சம்பவத்துக்கு சம்பந்தமே இல்லாதவர்களை விசாரணை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருட்டில் வைத்து பெண்களிடம் விசாரித்தது இன்ஸ்பெக்டருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை இழந்த பெண்ணின் புகாரை முறையாக விசாரணை நடத்தவில்லையென கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வானுமாமலைக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உத்தரவிட்ட நிலையில், மீண்டுமொருமுறை அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஆய்வாளர்

வீடியோவைக் காண...