தென்காசியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் பணம் கேட்பது தொடர்பான கேள்விக்கு 2 தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருவாய்த்துறை அலுவலகத்தில் அடங்கல் வழங்க அதிகாரிகள் ஆயிரத்து 500 ரூபாய் பணம் கேட்பதாக விவசாயி செல்லத்துரை முறையிட்டார். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.