8 
மாவட்ட செய்திகள்

தெருக்களில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு.. கழிவுநீர் கால்வாயில் அடைப்பு காரணமாக அவலம்

சென்னை ராயபுரம் பகுதியில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Srini Vasan

சென்னை ராயபுரம் பகுதியில் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இராமன் தெரு மற்றும் பிச்சாண்டி தெரு ஆகிய தெருக்களில் இந்த அவல நிலை அடிக்கடி ஏற்படுவதாகவும், இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காய்ச்சலால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைத்து இந்த பிரச்னைக்கு மாநகராட்சி நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.