New Project - 2025-05-28T185605 
மாவட்ட செய்திகள்

வீராத்தாள் அம்மன் கோவில் திருவிழாவையொட்டி மதுஎடுப்பு விழா... நூற்றுக்கணக்கான பெண்கள் மது குடங்களை சுமந்து ஊர்வலம்

புதுக்கோட்டை மாவட்டம் காட்டாத்தி வீராத்தாள் அம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவையொட்டி நடந்த மது எடுப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் காட்டாத்தி வீராத்தாள் அம்மன் கோவில் வைகாசி மாத திருவிழாவையொட்டி நடந்த மது எடுப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் மது குடங்களை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

இதற்காக காப்புக்கட்டி விரதமிருந்த பெண்கள் மண் பானைகளில் நவதானியங்களை நிரப்பி, அதில் தென்னை பாளைகளை வைத்து பூக்களால் அலங்கரித்த மது குடங்களை மேளதாளம் முழங்க எடுத்துச் சென்று ஊர்வலமாக கோவிலை அடைந்தனர்.

இதனை தொடர்ந்து வீராத்தாள் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.