ஈரோடு மாவட்டம், விஜயமங்கலத்தில் வரும் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக, கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பிரச்சாரம் நடைபெறும் இடத்தில் நிர்வாகிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டம் நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் கூறினார்.